மூடு

மதுபான பாட்டில்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 நபர்களை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2024

செ.வெ.எண்:-69/2024

நாள்:-26.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மதுபான பாட்டில்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 நபர்களை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரால் கடந்த 08.12.2024 அன்று மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையின்போது, தமிழ்நாடு அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக பெருமளவில் புதுச்சேரியிலிருந்து குறைந்த விலைக்கு மதுபான பாட்டில்களை கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் பதுக்கி வைத்ததன் அடிப்படையில், புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு, பேட்டை, 38 மணல் மேட்டுத் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் ரகுபதி, (வயது 32), கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், மேல அக்ரஹாரம் என்ற முகவரியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் முத்துக்குமரன்(வயது 30), திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், பரளி, 4-37, டி.லிங்கவாடி என்ற முகவரியைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகன் முருகன்(வயது 54) ஆகியோர் கைது செய்யப்பட்டு, குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ‘கள்ளச்சாராயக்காரர்’ என்ற அடிப்படையில் தற்போது திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி 3 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்சொன்ன ரகுபதி, முத்துக்குமரன், முருகன் ஆகிய 3 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து மேற்சொன்ன ரகுபதி, முத்துக்குமரன், முருகன் ஆகிய 3 நபர்களும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.