மூடு

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2024

செ.வெ.எண்:-09/2024

நாள்:-04.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இல்லங்களில் சேர்த்து பராமரிக்க முன்வரும் தொண்டு நிறுவனங்கள், புதியதாக மன நல காப்பகம் துவங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழக அரசின் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மன நல காப்பகம் நடத்த முன்வரும் தொண்டு நிறுவனங்கள் 40 மன நலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க இடவசதி வைத்திருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை 12.07.2024-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.