மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 150 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்
செ.வெ.எண்:-40/2024
நாள்:-13.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 150 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தனது சொந்த பணத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி சாமிநாதபுரம் அமராவதி ஆற்றுப்படுக்கை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களை சார்ந்த சுமார் 150 நபர்களுக்கு நிவாரண பொருட்களை இன்று (13.12.2024) வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி சாமிநாதபுரம் அமராவதி ஆற்றுப்படுக்கையில் நேற்று (12.12.2024) மற்றும் இன்று(13.12.2024) பெய்த மழையின் காரணமாக அதிக நீர்வரத்து ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் உள்ள 60 குடும்பங்களில் உள்ள 150 நபர்களை பாதுகாப்பான முறையில் மழைகால தற்காலிக முகாமான எஸ்.ஆர்.கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், பிஸ்கட், பால், மற்றும் காலை, மதியம் மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாய், தலையாணை, பெட்சீட், வேட்டி, சேலை, டி.சர்ட், துண்டு மற்றும் 10 கிலோ அரிசி உட்பட 21 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு டி.சர்ட், பேண்ட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு. பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படாது வகையில் இருக்க மருத்துவமுகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிலைமை சீராகும் வரை அவர்கள் பாதுகாப்பான முறையில் இங்கு தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பழனி சார் ஆட்சியர் திரு.கிஷன்குமார், இ.ஆ.ப., பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, துணை இயக்குநர் (பழனி) மரு.அனிதா, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபுபாண்டி, திரு.சுப்பிரமணியம் மற்றும் திரு.நாகரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.