மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
செ.வெ.எண்:-17/2026
நாள்:-09.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.72 கோடி மதிப்பீட்டிலான 64 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்இ திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(09.02.2026) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.5.72 கோடி மதிப்பிலான 64 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்இ தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்ற பின்பு தா.புதுக்கோட்டை ஊராட்சி பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் தா.புதுக்கோட்டை ஊராட்சி தா.புதுக்கோட்டை சாவடி முதல் மயானம் செல்லும் பாதையில் ரூ.2.35 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, மொக்கு தேவர் கோவில் ரோடு முதல் புதுக்கோட்டை வழி ரயில்வே கோட் ரோடு வரை ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு மெட்டல் சாலை அமைக்கும் பணி, ஸ்டாலின் நகர் கிழக்கு தெருவில் ரூ.4.69 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அர்ஜீணன் வீடு முதல் குட்டை மேடு வரை ரூ.60.00 மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி, சத்திரப்பட்டி ஊராட்சியில் புதுக்குளத்திலிருந்து மெயின் பைப்லைன் கோபாலபுரம் வரை ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி, சத்திரப்பட்டி பட்டாளம் வீடு முதல் கருங்குளம் வரை ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சத்திரப்பட்டி சமுதாயக் கூடத்திற்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணி, சத்திரப்பட்டி தா.புதுக்கோட்டை ரோடு முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சத்திரப்பட்டி ஊராட்சி முனியப்பன் வீடு முதல் மெயின் ரோடு வரை ரூ.11.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, தா.புதுக்கோட்டை ரோடு முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை ரூ.9.24 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி, சுகம் மருத்துவமனை முதல் ஜமீன்தாரர் வீதி வரை ரூ.5.93 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, முல்லை நகர் சர்ச் குறுக்கு வீதிகளில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வேலூர் அன்னப்பட்டி ஊராட்சியில் அன்னப்பட்டி மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி முதல் அங்கன்வாடி வரை ரூ.0.600 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, வேலூர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி முதல் மயானம் வரை ரூ.0.608 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, வேலூர் கலையரங்கம் முதல் கனகன் வீடு வரை ரூ.1.490 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கும் பணி, வேலூர் செந்தில் வீடு முதல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி வரை 1.480 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, வேலூரில் ரூ.13.560 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை, ரெட்டியபட்டி ஊராட்சியில் பெரியகரட்டுப்பட்டி செல்லமுத்து வீடு முதல் சமுதாயக்கூடம் வரை ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி, சின்னகரட்டுப்பட்டி பெருமாள் வீடு முதல் பட்டறை மேல்நிலைத்தொட்டி வரை ரூ.1.05 இலட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் அமைக்கும் பணி, பெரியகரட்டுப்பட்டி அங்கன்வாடி முன்பு ரூ.4.07 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, ரெட்டியப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்புறம் ரூ.11.20 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, ரெட்டிப்பட்டி முதல் சத்திரப்பட்டி-19 புதூர் சாலை வரை ரூ.77.04 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, பெரியகோட்டை ஊராட்சியில் பெரியகோட்டை மயானம் செல்லும் பகுதிக்கு ரூ.1.23 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, பெரியகோட்டையில் உள்ள சிறிய சுகாதார வளாகத்திற்கு ரூ.1.23 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக செப்டிக் டேங்க் அமைக்கும் பணி, பெரியகோட்டை தெற்கு தெரு முருகன் வீடு முதல் சங்கிலி வீடு வரை ரூ.1.64 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, பெரியகோட்டை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி முதல் குருவி மடைப் பகுதி வரை ரூ.3.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி, காசிய கவுண்டன் புதூர் ஆழ்துளை கிணற்றிற்கு ரூ.4.24 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 7.5 HP மின்மோட்டார் பைப்புகள் வயர்கள் பேனல் போர்டு பொருத்துதல் பணி, கப்பல்பட்டி சாலையில் இருந்து வீரமாத்தியம்மன் கோவில் வரை ரூ.41.34 இலட்சம் மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்துதல் பணி, நால்ரோடு முதல் ஆலயகவுண்டன்பட்டி வலை ரூ.78.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி,
விருப்பாட்சி ஊராட்சியில் சாமியார்புதூர் கிராமம் பழனிச்சாமி வீடு முதல் சுரேஷ் வீடு வரை ரூ.4.33 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, விருப்பாட்சியில் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப் லைன் அமைக்கும் பணிஇ அண்ணாத்துரை வீடு அருகில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிமொண்ட் சிலாப் அமைக்கும் பணிஇ கள்ளர் நகர் மக்கள் அய்யாவு வீடு முதல் பாலம் வரை ரூ.3.33 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சாவித்ரி வீடு முதல் வீரம்மாள்வீடு வரை ரூ.4.40 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணிஇ முத்துவேல் வீடு முதல் பாக்கியலட்சுமி வீடு வரை ரூ.3.93 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, பாரதிநகர் தெய்வேந்திரன் வீடு முதல் செந்தில்குமார் வீடு வரை ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிஇ குடும்பர் குடியிருப்பு கார்த்திக் வீடு முதல் கலாவதி வீடு வரை ரூ.3.44 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கருப்பணன் வீடு முதல் தேசீஸ்வரன் வீடு வரை ரூ.1.94 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கிழக்கு தெரு முருகன் வீடு முதல் ராஜேந்திரன் வீடு வரை 4.43 இலட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சாமியார்புதூர் 6-வது வார்டு ஆர்கே வீடு முதல் குடியிருப்பு கடைசி வரை ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சின்னகரட்டுப்பட்டி சாலையில் லில்லி தோட்டம் வரை ரூ.62.92 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்பாட்டு பணி,
அத்திக்கோம்பை ஊராட்சியில் குமாரசாமி கவுண்டன்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள ழுர்வு முதல் ராசுபிள்ளைபுதூர் மெயின் ரோடு வரை ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் பிவிசி பைப் லைன் அமைக்கும் பணி, சத்தியாநாதபுரம் வேணி வீடு முதல் பாரத் வீடு வரை ரூ.1.75 இலட்சம் மதிப்பீட்டில் வண்ணக்கல் பதிக்கும் பணி, குமாரசாமிகவுண்டன் புதூர் கணேசன் வீடு முதல் முனியப்பன் வீடு வரை ரூ.4.25 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, குமரேசன் வீடு முதல் செல்வன் வீடு வரை ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, கே.அத்திக்கோம்பை நுழைவு முதல் ராமசாமி வீடு வரை ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, புது அத்திக்கோம்பை கிருஷ்ணசாமி வீடு முதல் கணேசன் வீடு வரை ரூ.3.23 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சரவணன் வீடு முதல் சண்முகவேல் வீடு வரை ரூ.1.58 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சத்தியநாதபுரம் பிச்சை வீடு முதல் வேனி வீடு வரை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் உறிஞ்சு குழி அமைக்கும் பணி, கே.அத்திக்கோம்பை ஓடையின் குறுக்கே ரூ.2.75 இலட்சம் மதிப்பீட்டில் இருப்பு பாலம் அமைக்கும் பணி,
புது அத்திக்கோம்பை ராஜீவ் காந்தி நகர் பாஸ்கரன் வீடு முதல் ஓடை வரை ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி, ஆசிரியர் காலனி சரவணன் வீடு முதல் சண்முகம் வீடு வரை ரூ.2.80 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, குமாரசாமிகவுண்டன் புதூர் அன்பழகன் கடை முதல் நாகராஜ் வீடு வரை ரூ.1.30 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் மதிக்கும் பணி, கண்ணப்பநகர் OHT முதல் மருதநாயகம் வீடு வரை ரூ.0.50 இலட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் அமைக்கும் பணி, அண்ணாநகர் இந்துமதி வீடு முதல் மெயின் ரோடு வரை ரூ.1.04 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, குமாரசாமிகவுண்டன்புதூர் மெயின் ரோடு முதல் சுகந்தி வீடு வரை ரூ.3.55 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி முதல் மேல்நிலைத்தொட்டி வரை ரூ.0.21 இலட்சம் மதிப்பீட்டில் பிவிசி பைப் லைன் அமைக்கும் பணி, SRK ராமசாமி வீடு முதல் மயில்பெரியசாமி வீடு வரை ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, முருகேசன் வீடு முதல் தியாகு வீடு வரை ரூ.2.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஜெயராமன் வீடு முதல் நாச்சிமுத்து வீடு வரை ரூ.2.70 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையுடன் கூடிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி, அண்ணாநகர் மெயின் ரோடு முதல் தங்கவேல் ஆசிரியர் வீடு வரை ரூ.5.55 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, கண்ணப்பநகர் மெயின் ரோடு முதல் ரெங்கநாயகி வீடு வரை ரூ.3.20 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வீரக்குமார் வீடு முதல் கலைஞர்நகர் வரை ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கும் பணி, புது அத்திக்கோம்பை முதல் ராஜீவ்காந்திநகர் வரை ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.5.72 கோடி மதிப்பிலான 64 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது.
இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, சுகாதாரம், கல்வி, பேருந்து வசதிகள், மின்சார வசதிகள் அனைத்தும் செய்துதரப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) திரு.கார்த்திக்கேயன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன்இ ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன்இவட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.