மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் – அடிக்கல் நாட்டி மற்றும் நிறைவு செய்யப்பட்ட திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/02/2026

செ.வெ.எண்:-75/2026

நாள்:-27.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.81.34 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.81.34 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (27.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாட்சி ஊராட்சியினை சேர்ந்த 458 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், முதற்கட்டமாக 206 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

. . .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, 23 இலட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களைப் பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போது, இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை கடந்த 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம், பழனி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தானியக் கிடங்கியையும், கணக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொட்டம்பட்டி கிராமத்தில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தானியக் கிடங்கியையும், கணக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும், கணக்கன்பட்டி ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், அமரபூண்டி ஊராட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தானியக் கிடங்கியையும், அமரபூண்டி ஊராட்சியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள DD204 மேலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியையும், மேலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எவிக்சன் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடை என மொத்தம் ரூ.81.34 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், பழனி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்பட்டி ஊராட்சியில், ரூக்குவார்பட்டி சாலை முதல் முத்து வீடு வரை ரூ.4.38 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, கணக்கன்பட்டி ஊராட்சியில், மேட்டுக்காடு பழனிச்சாமி வீடு முதல் கலா வீடு வரை ரூ.4.90 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, கணக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொட்டம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி, கணக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொட்டம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில், ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டில் DP23 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கும் பணி, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சந்தைப் பகுதியில் ரூ. 1.50 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் கூட்டுறவு வங்கி அலுவலகம்அருகில் ரூ. 2.18 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி, எரமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பட்டிகுளம் சாலையினை ரூ.91.12 இலட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணி, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தை ரூ.4.33 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி,

அமரபூண்டி ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தெருவில், ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் தானியக் கிடங்கி அமைக்கும் பணி, அமரபூண்டி ஊராட்சிக்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில், செங்குளத்தில் உள்ள போர்வெல் முதல் அமரபூண்டி கிராம குளத்தினுள் உள்ள திறந்தவெளிக்கிணறு வரை ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக்கும் பணி, அமரபூண்டி ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு மேல்நிலைத்தொட்டி தென்புறம் உள்ள வீதியில் ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, அமரபூண்டி ஊராட்சிக்குட்பட்ட ரூக்குவார்பட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் வீடு முதல் கனிபால் வீடு வரை ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அமரபூண்டி ஊராட்சியில், அமரபூண்டி முதல் (ஆயக்குடி-பொருளூர் சாலை வழி) நெல்லுகுத்துபாறை வரை ரூ.149.38 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, அமரபூண்டி ஊராட்சியில் மெயின் ரோடு முதல் பழனிச்சாமி தோட்டம் வரை ரூ.29.55 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, அமரபூண்டி ஊராட்சியில் BT சாலை முதல் சக்தி தோட்டம் வரை ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, அமரபூண்டி ஊராட்சியில், மொல்லம்பட்டி முதல் பள்ளிக்கூடத்தான் வலசு பை-பாஸ் வரை ரூ.19.75 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, அமரபூண்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூடத்தான் வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தை ரூ.4.15 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி, மேலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எவிக்சன் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் வசதி, செப்டிக் டேங்க் அமைக்கும் பணி, மேலக்கோட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்புறம் ரூ.1.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மேலக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எவிக்சன் நகர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தை ரூ.4.33 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி உள்ளிட்ட ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், இன்றைய தினம் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், குடும்ப அட்டைகளையும் மற்றும் குடிமைப் பொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு. ஜி.ட்டி. ஸ்ரீராகவ் பாலாஜி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ், பழனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இளங்கோ, திரு.மதியழகன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.