மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 5,057 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து, மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் தனிமனித ஒழுக்கத்துடன் படித்து, வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
.

செ.வெ.எண்:-32/2024

நாள்:12.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 5,057 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து, மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் தனிமனித ஒழுக்கத்துடன் படித்து, வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி கல்வி மாவட்டத்தில் 5,057 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று(12.08.2024) மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நடப்பு நிதியாண்டில் கல்விக்காக ரூ.44,044 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்கள். இதில் விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், காலணி, புத்தகங்கள், பேக் ஆகிய வசதிகளுக்காக கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய இரண்டு துறை தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான துறை என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-2025 ஆம் கல்வியாண்டில், பழனி கல்வி மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 296 மாணவர்கள், 442 மாணவிகள் என 738 மாணவ, மாணவிகளுக்கும், குஜிலியம்பாறை வட்டாரத்தில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 178 மாணவர்கள், 219 மாணவிகள என 397 மாணவ, மாணவிகளுக்கும், கொடைக்கானல் வட்டாரத்தில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 247 மாணவரகள், 267 மாணவிகள் என 514 மாணவ, மாணவிகளுக்கும், பழனி ஊரக பகுதிகளில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 469 மாணவர்கள், 652 மாணவிகள் என 1121 மாணவ, மாணவிகளுக்கும், தொப்பம்பட்டி வட்டாரத்தில் 227 மாணவர்கள், 223 மாணவிகள் என 450 மாணவ, மாணவிகளுக்கும், வடமதுரை வட்டாரத்தில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 329 மாணவர்கள், 484 மாணவிகள் என 813 மாணவ, மாணவிகளுக்கும், வேடசந்துார் வட்டாரத்தில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 454 மாணவர்கள், 570 மாணவிகள் என 1024 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 52 பள்ளிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள், 2857 மாணவிகள் என ஆக மொத்தம் 5,057 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

இன்றையதினம், ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூன் 27-தேதி அன்று சட்டமன்றத்தில் அவர் துறையின் சார்பாக அறிவிப்பு வெளியிடுதல் சமயத்தில் தமிழ்நாட்டில் 22 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியிலும், ஒட்டன்சத்திரம் தொகுதியிலும் 2 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். மேலும், தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் தனிமனித ஒழுக்கத்துடன் படித்து, வாழ்க்கையில் முன்னேறி, பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் படித்து, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.க.திருமலைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி காயத்ரிதேவி, நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, முதன்மைக்கல்வி அலுவலர்(பொ) திருமதி பரிமளா, கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி மணிமொழி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.