மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செ.வெ.எண்:-74/2025
நாள்: 18.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் இன்று (18.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள்.
பொதுமக்களுக்கு அன்றாட தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரசின் திட்டங்களை பெற கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, புதிய மின் இணைப்பு, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டியிருக்கிறது. கடந்த முறை 1 கோடி 60 இலட்சம் நபர்கள் மனு வழங்கினார்கள். இதில் 1 கோடி 15 இலட்சம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விடுபட்டவர்களுக்கும் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மற்றும் 60 வயதை தாண்டியவர்களுக்கு முதியோர் உதவித்தொகையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உரிய கோரிக்கை மனுக்கள் அளிக்கின்ற அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் புதிய பேருந்துக்கள் வாங்கப்பட்டு தற்போது அனைத்து பகுதிகளிலும் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சை மேற்கொள்ள ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும், உயர் சிகிச்சை மேற்கொள்ளவும், பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
மேலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டைகள், 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சி தலைவர் திருமதி சி.கவிதா சின்னதம்பி, துணைத் தலைவர் திரு.சு.நாகப்பன், செயல் அலுவலர் திருமதி சி.பானுஜெயராணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.