மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024
.

செ.வெ.எண்:-38/2024

நாள்:-13.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் பார்வையிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரணம் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம்/ திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் திரு.ராஜப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் சாட்சர்க்யூட் என்கின்ற வகையில் ஒரு மின் விபத்து ஏற்பட்டு சிட்டி மருத்துவமனையில் பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்தினால் பெரிய அளவிற்கு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் ஒருவருக்கும் மட்டும் தீ காயம் 10 சதவீதம் என்கின்ற அளவில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அதனால் ஏற்படுகின்ற புகை, அதே போல் அந்த மருத்துவமனையிலிருந்து அவசர வழியில் இறங்குவதற்கு தாங்களாகவே யாருடைய அறிவுறுத்தலுமின்றி 6 நபர்கள் லிப்டில் பயணம் செய்துள்ளார்கள். அந்த வகையில் லிப்டில் பயணித்த 6 நபர்கள் சம்பவ இடத்தில் மரணம் அடைந்துள்ளனர். அதில் 3 ஆணிகள், 2 பெண்கள், 1 குழந்தை என 6 நபர்கள் மரணமடைந்துள்ளனர்.

நூற்றுக்கும் மேல்பட்டவர்களுக்கு புகை சூழ்ந்த காரணத்தினால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு, அப்போது அங்கே இருந்த தீயணைப்புத்துறை மீட்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஏராளமான நபர்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். அவர் இந்த சம்பவம் கேள்விபட்டவுடனே மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் விரைந்து வந்து போர்கால அடிப்படையில் பணியாற்றி, அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை தூக்கி வந்து திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட புறநோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று நேற்றே வீடு திரும்பி இருக்கிறார்கள். 3 நபர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீதமுள்ள 41 நபர்களில் 6 நபர்கள் இறந்த நிலையில் போஸ்ட்மாடம் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 4 நபர்களுக்கு பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். 31 நபர்கள் இலேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று இரவு இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களையும் தொடர்பு கொண்டு உடனடியாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சொன்னதன் அடிப்படையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அருகில் இருந்த காரணத்தினால் விரைந்து வந்து, விரைந்து பணியாற்றி, மேலும் உயிரிழப்பு இல்லாத நிலையில் தற்காத்து இருக்கிறார்கள். பலத்த காயம் அடைந்த 4 நபர்களில் 1 நபர் மட்டுமே இரண்டு நாட்களில் மீண்டு வருவார் அந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 3 நபர்கள் நல்ல முறையில் உள்ளனர். மற்ற 31 நபர்கள் இலேசான காயங்களுடன் உள்ளவர்கள் மிகவும் தெளிவான நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே ஏற்கனவே அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை தொடர இருக்கிறார்கள். 35 நபர்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 இறந்த நபர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் என மொத்தம் ரூ.18 இலட்சமும், 4 பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளோர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் என மொத்தம் ரூ.4 இலட்சமும், 31 இலேசான காயமடைந்து சிகிச்சையில் உள்ளோருக்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.15.50 இலட்சம் என ஆகமொத்தம் 41 நபர்களுக்கு ரூ.37.50 இலட்சம் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. காயம் அடைந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கும் எதிர்காலத்தில் எந்தமாதிரி சிகிச்சை தேவையோ விரைந்து செய்ய அமைச்சர் அவர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், மாநகராட்சி ஆணையாளர் திரு.என்.ரவிச்சந்திரன், மருத்துவகல்லூரி முதல்வர் மரு.சுகந்திராஜகுமாரி, இணை இயக்குநர்(சுகாதார பணிகள்) மரு.பூமிநாதன், துணை இயக்கநர்கள் மரு.செல்வகுமார், மரு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் உட்பட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.