மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 4 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதியை வழங்கினார்.
செ.வெ.எண்:-09/2025
நாள்: 04.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 4 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதியை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 4 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதியை இன்று(04.01.2025) வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் ரூ.36.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சிறுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(04.01.2025) திறந்து வைத்தார்.
மேலும், சிறுமலை ஊராட்சியை சேர்ந்த சஞ்சீவி மலை சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1.00 இலட்சமும், மல்லிகை சுயஉதவிக்குழுவிற்கு (15 நபர்கள் கொண்ட குழு) ரூ.1.00 இலட்சமும், மலைதென்றல் சுய உதவிக்குவிற்கு (15 நபர்கள் கொண்ட குழு) ரூ.50.00 ஆயிரமும், தாரை சுயஉதவிக்குழுவிற்கு (15 நபர்கள் கொண்ட குழு) ரூ.50.00 ஆயிரம் என 4 சுயஉதவிக்குழுவிற்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலான சழுதாய முதலீட்டு நிதியை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பல திட்டங்களை கொண்டு வந்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழ்நாடு அமைந்துள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாக ஊராட்சி மன்ற அலுவலகம், சாலை மேம்பாட்டு பணிகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ப்பட்டு வருகிறது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 1.50 இலட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் பல கோடி ரூபாய் நிதி ஆதாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு இதுவரை 7 கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நத்தத்தில் கல்லூரி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமத்துவம், சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காகவும், அரசின் திட்டங்களை அனைவரையும் சென்றடைய தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையுடன் இருந்து செயல்பட வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) திரு.ரா.ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கே.அண்ணாதுரை, திரு.ச.இராஜசேகரன், திரு.த.பாலசுப்பிரமணியன்,சிறுமலை ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி சங்கீதா வெள்ளிமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.