மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 12/04/2025
.

செ.வெ.எண்:-30/2025

நாள்:-11.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.காந்திராஜன், ஆகியோர் தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தினை இன்று(11.04.2025) திறந்து வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ரூ.33.33 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம், ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் அறை, பார்வையாளர்கள் அறை, பதிவறை மற்றும் ஆவண காப்பறை கட்டடம், ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வு கூட்ட அரங்க கட்டடம், ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் கணினி அறை, இ-சேவை மையம் கட்டடம் என மொத்தம் ரூ.89.33 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், செயற்பொறியாளர் கட்டடம் (ம) பராமரிப்பு திரு.எஸ்.தங்கவேல், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.எம்.காமராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.செல்லச்சாமி, நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டிஅம்பலம், மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.