மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம், விருதுகள் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்களை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
செ.வெ.எண்:-05/2024
நாள்: 03.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம், விருதுகள் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்களை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம், மாநில அளவிலான விருதுகள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(03.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்களிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுயஉதவிக்குழு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா சென்னையில் 30.09.2024 அன்று நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய 70 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான காசோலைகள் மற்றும் மணிமேகலை விருதுகளையும், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 516 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 6135 நபர்களுக்கு ரூ.30.20 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள், 13 வங்கிகளுக்கு வங்கியாளர் விருது ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
அதில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணகி சுயஉதவிக்குழு, குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சேர்ந்த பாரதமாதா குழு, திண்டுக்கல் மாநகராட்சியைச் சேர்ந்த அட்சயா மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் சந்தியா மகளிர் சுயஉதவிக்குழு என 4 குழுவினர் மணிமேகலை விருதுகள் மற்றும் தலா ரூ.1.00 இலட்சம் பரிசுத்தொகை பெற்றனர். இந்த சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.10.2024) நேரில் சந்தித்து விருது மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.