மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு 3,500 க
செ.வெ.எண்:-56/2025
நாள்:-16.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழகம் முழுவதும் ரூ.3,500 கோடி வங்கி நேரடிக் கடனாகவும், 1,00,000 அடையாள அட்டைகளும் வழங்கிடும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் இன்று (16.09.2025) சேலம் மாவட்டத்தில் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப., அவர்கள், ஊரகப் பகுதிகளில் 559 குழுக்களுக்கு ரூ.64.00 கோடிகளையும், நகர்ப்புர பகுதிகளில் 325 குழுக்களுக்கு ரூ.26.23 கோடிகளையும் என மொத்தம் 884 குழுக்களுக்கு ரூ.90.23 கோடிகள் வங்கிக்கடனாகவும், 1,491 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளும் இவ்விழாவில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, உதவி திட்ட அலுவலர்கள் திரு.பி.தங்கவேலு, திருமதி தி.ஐஸ்வர்யா, திருமதி கி.கங்கா கௌரி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி இரா.சுபாஷினி, கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆர்.சிவக்குமார், மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்) திருமதி பி.சுதா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.