மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2024
.

செ.வெ.எண்:-42/2024

நாள்:-14.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் புதிய நவீன சமுதாயக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து இன்று(14.08.2024) திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் புதிய நவீன சமுதாயக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புளி ஊராட்சி தோப்புபட்டி காலனி(மேற்கு) பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிட மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் வகையில் மணமகன், மணமகள் அறைகள், மணமேடை பார்வையாளர் அரங்கம் விருந்தினர் அறைகள், கழிவறைகள். குடிநீர் தொட்டி. உணவருந்தும் அறை, என அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன சமுதாயக்கூடம் தமிழ்நாடு அரசின் நிதி ஒப்பளிப்புடன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ மதுரைக்கோட்டம்) மூலம் சமுதாயக்கூடம் ரூ. 1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

தரைப்பகுதியில் முகப்புமண்டபம் மற்றும் வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தை அணுகுவதற்கு ஏதுவாக விசாலமான படிக்கட்டுகள் மற்றும் சாய்வு தளவசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்த்தளத்தில் அலுவலக அறையும், முதல் தளத்தில் பார்வையாளர் அரங்கம் மற்றும் மணமேடையும், மணமகன் அறை, மணமகள் அறை, விருந்தினர் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மணமகன் மற்றும் மணமகள் அறைகள் கழிவறை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சமுதாயக்கூடத்திற்கென தனியாக ஆழ்துளைகிணறு வசதி செய்யப்பட்டு மாடியில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்கப்பட்டு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. காற்றோட்டம் மற்றும் இடவசதியை கருத்தில் கோண்டு போதுமான ஜன்னல் மற்றும் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது. மின்விசிறி, மின்விளக்குகள் முதலிய மின்சாதனப் பொருட்கள் தேவைக்கேற்றாற்போல் பொருத்தப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு வசதியும் இக்கட்டிடத்திற்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சுப்புலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு. ஆறுமுகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மேலாளர் திரு.ஏ.ஆர்.முகைதீன் அப்துல்காதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கிருஷ்ணன், திரு.மலரவன், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுந்தரி அன்பரசு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.