மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்துகொண்டு, புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விழாப்பேருரை ஆற்றினார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025
.

செ.வெ.எண்:-43/2025

நாள்:-14.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்துகொண்டு, புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விழாப்பேருரை ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, 998 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் இன்று(14.04.2025) நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்துகொண்டு, புதிய விடுதி, பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், கற்றல் கற்பித்தல் அறைகள், 1000 பழங்குடியினர் வீடுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 49,542 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, விழாப்பேருரை ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் மற்றும் வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் கலந்துகொண்டு, 998 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவில், அண்ணல் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் ஆகியோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ வன உரிமை அடையாள அட்டை 19 பயனாளிகளுக்கும், இலவச தையல் இயந்திரம் 6 பயனாளிகளுக்கு ரூ.40,140 மதிப்பீட்டிலும், பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை 40 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பி.எம்.அஜய் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டிலும், சிஎம் அரைஸ் திட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.19.08 லட்சம் மதிப்பீட்டிலும், தூய்மை பணியாளர்கள் நலத் திட்ட அடையாள அட்டை 218 பயனாளிகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் விலையில்லா வீட்டு மனை பட்டா 450 பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் சுயதொழில் கடன் 20 பயனாளிகளுக்கு ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டிலும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 100 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு தொழில் வணிகத்துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ.36.73 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.44,000 மதிப்பீட்டிலும், என்ஏடிபி திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப் பெயர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் பசுமை குடில் அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.16.88 லட்சம் மதிப்பீட்டிலும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் பந்தல் அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.1.13 லட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.6000 மதிப்பீட்டிலும், ஓய்வூதியம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,400 மதிப்பீட்டிலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் நுண் நிறுவன நிதி கடன் 7 பயனாளிகளுக்கு ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டிலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் 20 பயனாளிகளுக்கு ரூ.1.16 லட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் 53 பயனாளிகளுக்கு ரூ.53.95 லட்சம் மதிப்பீட்டிலும், விலையில்லா கைப்பேசி 10 பயனாளிகளுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை 10 பயனளிகளுக்கு என ஆக மொத்தம் 998 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி ஜனநாயக இந்தியாவிற்கு பாதுகாப்பான சட்ட வடிவமைப்பை உருவாக்கித் தந்தவர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். அண்ணல் அம்பேத்கர் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஜனநாயக இந்தியாவில் சுமார் 130 கோடி மக்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கும் வகையில் சட்ட வடிவமைப்பை வகுத்தவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார்.

அந்த வகையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கி ஒரு சமத்துவத்தை, சமநிலையை கொண்டு வந்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8 கோடி மக்களுக்கும் சமநிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பான வீடு என ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ஜாதி, மதம் பாகுபாடு இன்றி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி சமநிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிற்கே முன்னாடியாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது சுமார் 2.50 லட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2,500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வி, மருத்துவம் என அனைத்து மக்களுக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்கான இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, சமநிலையை உருவாக்கி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

அண்ணல் அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் சட்டம்தான் இதுபோன்ற நிலையை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மக்கள்தான் நாட்டின் எஜமானர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நாம் சமமாக வாழ வேண்டும் என்பதற்காக பாதுகாப்பான சட்டத்தை உருவாக்கி சுமார் 130 கோடி மக்களும் சமம் என்ற நிலையை உருவாக்கியவர். அந்த வகையில் தமிழ்நாட்டில் சமத்துவ நாள் இன்று நடத்தப்படுகிறது

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாதுகாப்பான அரசியல் சாசனத்தை உருவாக்கி சமத்துவத்தை நிலைநாட்டி உள்ளார். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஜாதி, மத, இன பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியுள்ளார், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி அவர்கள் பேசினார்.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

அண்ணல் அம்பேத்கர் ஒரு சட்ட மேதை, பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி. அவர் சமூகத்திற்காக ஏராளமான சேவையாற்றியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் வகுத்து தந்த சட்ட வடிவமைப்புதான் இன்றும் நடைமுறையில் உள்ளது. அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்த தினமானது சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன்பிறகு இந்தியாவில் பல மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த வகையிலே இந்தியாவிற்கே முன்னோடியாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்தினார். அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்தபோது ஜாதி வேறுபாடு அற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக சமத்துவபுரங்களை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

அந்த வகையிலே தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்களை உருவாக்கி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைக்கு செல்லும் ஒவ்வொரு மகளிருக்கும் போக்குவரத்து செலவு குறைந்து மாதம் சுமார் ரூ.900 சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை குடிசையில்லா மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மேலும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆதிதிராவிடர் நல மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, துணை மேயர் திரு.ச.ராஜப்பா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்திரி, முக்கிய பிரமுகர் திரு.சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.