மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடு

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2025
.

செ.வெ.எண்:-109/2025

நாள்:-28.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (27.09.2025) அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்து. திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழத்தவர்களின் குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 10 இலட்சம் வழங்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழக வெற்றிக்கழக பரப்புரை நிகழ்ச்சிக்கு சென்று உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொல்லப்பட்டியை சேர்ந்த திருமதி பாத்திமா பானு அவர்களின் குடும்பத்தினருக்கும், வேடசந்தூர் வட்டம், பாகாநத்தம் கிராமம், ஒத்தப்பட்டி காலனியை சேர்ந்த திரு.தாமரைக்கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் குஜிலியம்பாறை வட்டம், வடுகம்பாடி கிராமம், தளிப்பட்டியை சேர்ந்த திரு.சங்கர் கணேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன் அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.