மூடு

மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

செ.வெ.எண்:-50/2024

நாள்:-16.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 56,430 வீடுகள், 10,430 வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை 360 தூய்மை பணியாளர்களைக் கொண்டு தினசரி 92 மெட்ரிக்டன் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 7 நுண்ணுர செயலாக்க மையங்களில் உரமாக்கப்பட்டு 220 மெட்ரிக்டன் உரம் கையிருப்பில் உள்ளது. தயாரிக்கப்பட்ட உரமானது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் விவசாய அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை மாநகராட்சி பொதுசுகாதாரப் பிரிவில் சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு திண்டுக்கல் பெஸ்கி எதிரில் உள்ள நுண்ணுர செயலாக்க மையம் அலைபேசி எண்: 87789 00594, ஆர்.எம் காலனி, மருதாணிக்குளம் மற்றும் கோவிந்தாபுரம் நுண்ணுர செயலாக்க மையம் அலைபேசி எண்: 99431 29776, திண்டுக்கல் அண்ணாநகர் நுண்ணுர செயலாக்க மையம் அலைபேசி எண்: 97915 66577, வத்தலக்குண்டு ரோடு நுண்ணுர செயலாக்க மையம் அலைபேசி எண்: 96889 21848, சந்தைபேட்டை மற்றும் வேடபட்டி நுண்ணுர செயலாக்க மையம் அலைபேசி எண்: 99400 85267 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.