மூடு

‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’

வெளியிடப்பட்ட தேதி : 28/01/2026
.

செ.வெ.எண்: 82/2026

நாள்: 28.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியை இன்று (28.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ குறித்து இளைஞர்கள், மாணவ-மாணவியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆர்.எம். காலனி, பாண்டியன்நகர் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் வடிவிலான சிலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் திருவிழா வருகின்ற 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் புதிக சிந்தனைகளோடும், ஆக்கப்பூர்வமான நோக்கத்தோடும் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்துஇ மாணவஇ மாணவியர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் இன்றைய தினம் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

. . .
. . .

 

அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தற்போது படித்த இளைஞர்கள் மேனாட்டு சிந்தனைகளுக்கு ஆட்படுகின்றனர். அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினாலும் நாம் அனைவரும் நமது தாய்மொழியாகிய தமிழ்மொழியை நிலைபெறச் செய்தல் வேண்டும். ஏனெனில், தமிழ்மொழிதான் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் உள்ளடக்கிய மொழியாகும்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணம் மனித வளமாகும். ஏனெனில், இளைஞர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய தனித்திறமைகளை நிலைநாட்டி வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் தனிமனித வளர்ச்சி என்பது மிகமிக முக்கியமாகும். அதனடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், இளைஞர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு முன்னெடுப்பு நிகழ்வாக இந்த அறிவியல் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் திருவிழா வருகின்ற 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த அறிவியல் திருவிழாவில் 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்த அறிவியல் திருவிழாவில் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரம் மாணவர்களும், கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களும், 30 ஆயிரம் பொதுமக்களும் என மொத்தம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அறிவியல் திருவிழா நடைபெற்று வரும் மைதானத்தில் இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்படும் ராக்கெட்டுகள் விண்வெளியில் ஏவப்பட்டு வருகின்றன. விண்வெளியில் ராக்கெட் ஏவப்படுவது போல, மாணவ, மாணவியர்களின் சிந்தனைகளும் வானளாவியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வருங்காலத்தில் படித்த இளைஞர்கள் நல்ல நிலையில் இருப்பதற்கும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கும் தங்களுடைய திறமைகளை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே நமது மாவட்டமும், மாநிலமும், நாடும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடையும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த அறிவியல் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளை மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடனும், உற்றார்-உறவினர்களுடனும் சேர்ந்து கொண்டாடி வருகிறீர்கள். எனவே, ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை நாம் கொண்டாடி மகிழும் திருவிழாக்களிலும் ஒன்றாகும் என்பதை உணர்ந்து இத்திருவிழாவில் தங்களது குடுபத்துடனும், உறவினர்களுடனும் கலந்துகொண்டு இத்திருவிழாவை சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

இவ்விழாவில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி, கார்டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.மாறன் நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ப.உஷா, திண்டுக்கல் அறிவியல் திருவிழா திட்ட இயக்குநர் பேரா.முனைவர் ரெ.மனோகரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.