மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரையில் 09.10.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2024

செ.வெ.எண்:07/2024

நாள்:-03.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரையில் 09.10.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தகவல்.

மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.10.2024 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 10ம் வகுப்பு, ஐடிஐ, பட்டய படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID கார்டு நகல், ஆதார் அட்டை நகல், தன் விபரம், கல்விச்சான்று, தொழிற்கல்விச் சான்று, அனுபவ சான்று, புகைப்படம், மற்றும் தங்களிடம் உள்ள இதரச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் துறை வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயர், முகவரி மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்களை திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ 07.10.2024-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு மட்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் அமெரிக்கன் கல்லூரிக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்துதரப்படும். இலவச பேருந்து 09.10.2024 அன்று காலை 8.00 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து புறப்படும்.

எனவே, தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயரை 07.10.2024-ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 0451-2460099 வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.