மூடு

மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை மிசன் சார்பில் நீர் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025
.

செ.வெ.எண்:- 50/2025

நாள்: 13.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை மிசன் சார்பில் நீர் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது

மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை மிசன் சார்பில் நீர் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.09.2025) நடைபெறுகிறது

திண்டுக்கல் மாநகராட்சி YMR பட்டி குளம், கோபாலசமுத்திர குளம், முத்துசாமி குளம் மற்றும் லிங்கம்மாள் குளம் ஆகிய நீர் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுவரை 5-டன் நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (13.09.2025) YMR பட்டி குளத்தில் மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு, நெகிழி கழிவுகள் சேகரித்தல், மரக்கிளைகள் வெட்டுதல், நடைபாதை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது. மேலும், மஞ்சப்பை வழங்குதல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் குளத்தை சுற்றியுள்ள சுவர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த சுவர் ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுடைய தமிழ்நாடு துாய்மை இயக்கம் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் இன்று(13.09.2025) திண்டுக்கல் மாவட்டத்தின் திண்டி நீர்வளம் காப்போம் என்ற முக்கியமான திட்டத்தை மதிப்பிற்குரிய மேயர் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. துாய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி, NSS, NCC தன்னார்வலர்கள், நேரு யுவ கேந்திரா குறிப்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பெரிய அளவிலான நெகிழி பொருட்கள் சேகரிப்பு என்ற பெரிய முன்னெடுப்பை தொடங்கினார்கள்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியுள்ளோம். அதில் மாநகராட்சி பகுதியில் 10 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 10 குளங்களில் முதற்கட்டமாக 4 குளங்கள் துாய்மைப்படுத்தப்பட உள்ளது. தூய்மைப்பணிகளில் NSS, NCC தன்னார்வலர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தூய்மைப்பணிகள் பற்றிய விழிப்புணர்வு பற்றி அறிந்து கொள்வதற்காக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர்களில் பெயின்டிங் செய்து வருகின்றனர். நீர் வளங்களை பாதுகாகத்தல், நெகிழி பொருட்களை தவிர்த்தல், நெகிழி பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்கள் பயன்படுத்துதல் இதன் குறிக்கோள் ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கியமாக இந்த ஆண்டு நீர் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு குளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் நகர்ப்புறப்பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் தூய்மைப்பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதில் முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 1.0 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து 2.0 திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் நேரக்கம் அரசு அலுவலகங்கள் அதை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டார அளவிலான அலுவலகங்களையும் தூய்மைப்படுத்த தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மு.ராஜேஸ்வரி சுவி, ஆணையாளர் திரு.செந்தில்முருகன், மாநகர் நல அலுவலர் திரு.இராம்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முனைவர் ஆர்.குணசேகரன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் திரு.இராஜப்பா, கவுன்சிலர் திருமதி ஜெயந்தி, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மகுடபதி, பொறியாளர்(தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்) திரு.குணசேகரன், மாநகராட்சி, உள்ளாட்சி, தீயணைப்புத்துறை, பசுமை உறுப்பினர்கள், தேசிய சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.