மூடு

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2024
.

செ.வெ.எண்:-22/2024

நாள்:-09.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரை, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(09.08.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில். விலையில்லா பித்தளைத் தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டம், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், நவீன சலவையகம், ஆயத்த ஆடை அலகுகள், கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், விடுதிகளில் சிறப்பு பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள், சீர்மரபினர் நல வாரியம், விடுதி மாணவ மாணவியர்களுக்கு மாதாந்திர உணவு செலவினம், விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டம், விடுதி மாணவ, மாணவிகள் சேர்க்கை ஆகிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்டங்களை விரைவாக செயல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, திண்டுக்கல், மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.