முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.6,31,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
செ.வெ.எண்:-60/2024
நாள்:-25.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.6,31,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.10.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள் தொடர்பான மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா, கடனுதவி, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 34 மனுக்கள் பெறப்பட்டன.
ஏற்கனவே இரண்டாம் காலாண்டிற்கு நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்பேரில், கருணைத் தொகை 1 பயனாளிகளுக்கு ரூ.2,00,000, தொகுப்புநிதி கல்வி உதவித்தொகை 15 பயனாளிகளுக்கு ரூ.3,81,000, இராணுவப்பணி ஊக்க மானியம் 1 பயனாளிகளுக்கு ரூ.25,000, சைனிக் பள்ளியில் படிப்பதற்கான ஊக்க மானியம் 1 பயனாளிகளுக்கு ரூ.25,000 என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.6,31,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(கூ.பொ.) திருமதி ச.சுகுணா, முன்னாள் இராணுவத்தினர் மருத்துவமனை பொறுப்பு அலுவலர் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் திரு.வீரமணி, முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.