மூடு

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 13/09/2024
.

செ.வெ.எண்:-26/2024

நாள்:-10.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (10.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில், 01.01.2025-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள், வாக்குச்சாவடி மையங்கள் சீரமைப்பு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு வாக்குச்சாவடியில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தாலோ அல்லது 2 கி.மீட்டர் துாரத்துக்கு மேல் இருந்தாலோ அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி உருவாக்க தேர்தல் ஆணையத் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஒட்டன்சத்திரம் ஆர்சி லயோலா அரசு பகுதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளி (வடக்கு பார்த்த கட்டடம்) வாக்குச்சாவடியில் 1,519 வாக்காளர்கள் இருப்பதையடுத்து, அங்கு புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டன்சத்திரம் ஆர்சி லயோலா அரசு பகுதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளி (வடக்கு பார்த்த கட்டடத்தில் மேற்கு பகுதி) வாக்குச்சாவடியில் 767 வாக்காளர்களும், ஆர்சி லயோலா அரசு பகுதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளி (வடக்கு பார்த்த கட்டடத்தில் கிழக்குப்பகுதி) வாக்குச்சாவடியில் 752 வாக்காளர்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கே.ராஜதனிக்கோட்டை பாண்டியன் உதவிபெறும் தொடக்கப்பள்ளி(வடக்குப்பார்த்த கட்டடம்) வாக்குச்சாவடியில் 1,509 வாக்காளர்கள் இருப்பதையடுத்து, அங்கு புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.ராஜதனிக்கோட்டை பாண்டியன் உதவிபெறும் தொடக்கப்பள்ளி(வடக்குப் பார்த்த கட்டடத்தில் மேற்கு பகுதி) வாக்குச்சாவடியில் 963 வாக்காளர்களும், கே.ராஜதனிக்கோட்டை பாண்டியன் உதவிபெறும் தொடக்கப்பள்ளி(வடக்குப்பார்த்த கட்டடத்தில் கிழக்குப்பகுதி) வாக்குச்சாவடியில் 546 வாக்காளர்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(கிழக்கு கட்டடத்தில் வடபகுதி) வாக்குச்சாவடியில் 1,501 வாக்காளர்கள் இருப்பதையடுத்து, அங்கு புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(கிழக்கு கட்டடத்தில் வடபகுதி) வாக்குச்சாவடியில் 1058 வாக்காளர்களும், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி(மேற்கு பார்த்த மத்திய கட்டடத்தில் தென்பகுதி) வாக்குச்சாவடியில் 443 வாக்காளர்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 3 கி.மீட்டர் துாரத்துக்கு மேல் வாக்குச்சாவடி அமைந்திருந்தால், அங்கு குடியிருப்பு பகுதியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்க தேர்தல் ஆணையத் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட்டத்துப்பட்டி கிறிஸ்துராஜா சில்ரன்ஸ் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்து வரும் 1121 வாக்காளர்களில் குஞ்சனாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குஞ்சனாம்பட்டியில் புதிய வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை விடுத்ததன்பேரில், குஞ்சனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, குட்டத்துப்பட்டி கிறிஸ்துராஜா சில்ரன்ஸ் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடியில் 675 வாக்காளர்கள் மற்றும் குஞ்சனாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வாக்குச்சாவடியில் 446 வாக்காளர்கள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் குட்டத்துப்பட்டி கிறிஸ்து ராஜா சில்ரன் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அதே இடத்தில் குட்டத்துப்பட்டி கிறிஸ்ட் தி கிங் நர்சரி மற்றும பிரைமரி பள்ளியில் வாக்குச்சாவடிகள் என்று பெயர் மாற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடி மையங்கள், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்கள், 129-ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 321 வாக்குச்சாவடி மையங்கள், 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 271 வாக்குச்சாவடி மையங்கள், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்கள், 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்கள், 133-வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2,123 வாக்குச்சாவடி மையங்கள்ஏற்படுத்தப்படவுள்ளன. இதுதொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பினால் 2 நாட்களில் தெரிவிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களி 29.10.2024 வரை பெறப்படும். அதன்பின்னர் 29.10.2024 முதல் 28.11.2024 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன், அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.