மூடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து எதிர்வரும் 14.12.2025 வரையில் க

வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025

செ.வெ.எண்:-26/2025

நாள்: 11.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து எதிர்வரும் 14.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்களின் தகவல்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் 04.11.2025 முதல் 100% கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களில் 83% படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களில் வருகையின்மை (Absent), இடம் பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை (untraceable) ஆகியவைகள் மீள திரும்பப்பெற இயலாத காரணத்தினால் அவைகளை (ASD) என பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதற்கு எதிர்வரும் 14.12.2025 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வருகையின்மை (Absent), இடம் பெயர்ந்தோர் (Shifted), இறப்பு (Death) மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை (untraceable) ஆகியவைகளை மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மேலாய்வு (Super check) செய்யப்பட்டது. எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கத்தின்படி அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வழங்கப்பட்டு மீளப் பெறப்பட்டு, அவைகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு படிவம்- 6 தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் அனைவரும் படிவம் 6-ஐ சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். இதற்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் போதிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.