வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்: 35/2024
நாள்: 16.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம், தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(16.11.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க திருத்தம் 2025-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2025-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 29.10.2024 முதல் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று(16.11.2024) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாம் தொடர்ந்து 17.11.2024(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23.11.2024(சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
வாக்காளர் பட்டியலில் பெயர்(31.12.2006-ஆம் தேதி வரை பிறந்தவர்கள்) சேர்ப்பதற்கு படிவம் – 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம்–8, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை சேர்க்க படிவம் 6பி ஆகிய படிவங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கி பயன்பெறலாம்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, இந்த சிறப்பு முகாம்களை சிறந்த முறையில் நடத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகளை செம்மையாக மேற்கொள்ளவும், தகுதியுள்ள அனைவரின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற தொகுதியில் ஆயக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஒட்டன்சத்திரம் கேஆர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் வேடசந்துார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி, நத்தம் சட்டமன்ற தொகுதியில் எ.வெள்ளோடு புனித ஜேம்ஸ் தொடக்கப்பள்ளி, ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் காந்திகிராமம் தொடக்கப்பள்ளி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அம்மையநாயக்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் இன்று(16.11.2024) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025ஐ முன்னிட்டு விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பழனி சார் ஆட்சியர் திரு.எஸ்.கிஷன்குமார், இ.ஆ.ப., வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திண்டுக்கல் திரு.இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன், வட்டாட்சியர்கள் திரு.பிரசன்னா, திரு.பழனிச்சாமி, திரு.ஜெயபிரகாஷ், திரு.சுல்தான், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.