வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்: 51/2024
நாள்: 18.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(18.12.2024) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க திருத்தம் 2025-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது. 01.01.2025-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 29.10.2024 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தப்புளி கிராமம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பழனி சார் ஆட்சியர் திரு.எஸ்.கிஷன்குமார், இ.ஆ.ப., வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திண்டுக்கல் திரு.இரா.சக்திவேல், கொடைக்கானல் சிவராம், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன், வட்டாட்சியர்கள் திரு.பிரசன்னா, திரு.பழனிச்சாமி, திரு.ஜெயபிரகாஷ், திரு.சுல்தான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.