மூடு

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூட்டம் மற்றும் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
.

 

செ.வெ.எண்:-15/2026

நாள்: 07.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026
சிறப்பு பார்வையாளர் (Electoral Roll Observer) திரு.குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (07.02.2026) திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 சிறப்பு பார்வையாளராக (Electoral Roll Observer) நியமிக்கப்பட்டுள்ள திரு.குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்றுஇ வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும்இ ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 சிறப்பு பார்வையாளர் (Electoral Roll Observer) திரு.குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்..

 

தொடர்ந்து, 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டக்காமன்பட்டி கிராமம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாகம் எண்கள்.81, 82 மற்றும் 83-க்கான வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பெறப்பட்ட படிவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 சிறப்பு பார்வையாளர் (Electoral Roll Observer) திரு.குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, நிலக்கோட்டை வாக்காளர் பதிவு அலுவலர் திரு.க.சுகுமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ் அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.