மூடு

விபத்தில் உயிரிழந்த மார்க்கம்பட்டியைச் சேர்ந்த திரு. கே.பெருமாள் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025
.

செ.வெ.எண்:-54/2025

நாள்:-18.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

விபத்தில் உயிரிழந்த மார்க்கம்பட்டியைச் சேர்ந்த திரு. கே.பெருமாள் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் திரு.கே.பெருமாள்(வயது 53) என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக திண்டுக்கல்லில் இன்று(18.04.2025) நடைபெற்ற இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. சாலை விபத்தில் ஒருவர் மரணம் அடைந்த துயரச் சூழலில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் அவருடைய குடும்பத்தினரின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மார்க்கம்பட்டி கிராமம், தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் திரு.கே.பெருமாள்(வயது 53) என்பவர் 15.04.2025 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தார். அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 17.04.2025 அன்று இரவு இறந்தார். அதையடுத்து அன்னாரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

பின்னர், திண்டுக்கல் ஆர்எம் காலனி மயானத்தில் இன்று(18.04.2025) நடைபெற்ற இறுதிச்சடங்கில் திரு.கே.பெருமாள் உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மதியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.