மூடு

வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2024

செ.வெ.எண்:-03/2024

நாள்:-06.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24.06.2024 முதல் 28.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு அன்று மாணவ, மாணவிகள் தங்களது அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் சாதிச்சான்றிதழ், அசல் பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஐந்து, வங்கி கணக்குப் புத்தக முதல் பக்க நகல் மற்றும் இணையவழியில் பதிவிட்ட விண்ணப்பத்தின் அச்சு நகல் ஆகியவற்றுடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களின் இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் நாள்களில் காலை 9 மணிக்கு கட்டாயமாக பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் கலந்து கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.