வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-36/2025
நாள்:-15.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
2025-2026-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை உழவர் அமைச்சரின் அறிவிப்பின் படி உழவர்கள் விளைவித்த பொருட்களுக்கான மதிப்புக் கூட்டு அலகுகள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல் திட்டத்தின்கீழ், வேளாண் பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முடுதலீட்டு மானியம் 25 சதவீதமும் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு. தொழில் துறையில் பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தொழில் துவங்குவதற்கு கூடுதலாக 10 சதவீதமும், அதாவது 35 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.1 கோடியே, 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதுதவிர, 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு 5 சதவீதமாக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாக பெறலாம். இந்தத் திட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் வேளாண், தோட்டக்கலை விளை பொருட்களின் இரண்டாம் (2-நிலை) மற்றும் மூண்றாம் (3-நிலை) நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்க வேண்டும். முதலீட்டு மானியத் தொகையானது 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் ஆகிய 2 தவணைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 1.00 கோடி முதலீட்டு மானியத் தொகை இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பிக்கக்கூடிய தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வலைதளத்திலிருந்து (http://www.agrimark. in.gov.in) விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்ப படிவம் இணைப்பு -2மற்றும் ஆவனங்களுடன் இணைப்பு- 3 வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் .விண்ணப்பம், திட்ட அறிக்கை மற்றும் வங்கி விண்ணப்பம், வங்கி பரித்துரை கடிதம் மற்றும் இதர விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.