“வைகை இலக்கியத் திருவிழா-2025“ 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
செ.வெ.எண்:-34/2025
நாள்:-20.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
“வைகை இலக்கியத் திருவிழா-2025“ 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலக இயக்ககம் ஆகியவை சார்பில் வைகை இலக்கியத் திருவிழா-2025 திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் வைகை இலக்கியத் திருவிழாவை 23.01.2025 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி வைத்து விழாப்பேருரையாற்ற உள்ளார்கள்.
வைகை இலக்கியத் திருவிழாவானது, பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் ஆகிய இரண்டு அரங்கங்களுடன் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஓவியக் கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதை, கட்டுரை மற்றும் நுால் திறனாய்வு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும் வினாடி வினா போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
24.01.2025 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி விழாப்பேருரையாற்ற உள்ளார்கள்.
விழாவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொள்ளவள்ளனர்.
இவ்விழாவில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.