10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

செ.வெ.எண்:-69/2025
நாள்: 25.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 28.03.2025 அன்று தொடங்கி 15.04.2025 வரை நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 21,757 மாணவ, மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அஞ்சல் அட்டை வாயிலாக தனித்தனியே வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், ”அன்பார்ந்த புதுமைப்பெண்களே! தமிழ்ப் புதல்வர்களே! 10 ஆண்டுகளாய் நீங்கள் அணிந்த பள்ளிச் சீருடைகளுக்கும், தாங்கிய புத்தகங்களுக்கும், உள்வாங்கிய பாடங்களுக்கும் அர்த்தம் சேர்க்கும் காலமிது! தேர்வு எழுதும் நேரமிது! நேரத்தைப் பொன்னாக்கி, கருத்தைக் கண்ணாக்கி, சிந்தனையை நேராக்கி, அறிவைக் கூராக்கி, நம்பிக்கையோடு படித்து, துணிவோடு தேர்வினை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் எழுதப் போகும் இத்தேர்வு உங்களை உயர்த்துவதோடு, உங்கள் வாழ்க்கை வரலாற்றையே மாற்றும். வெல்லுங்கள்! வாழ்த்துகள்!“ என தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.