பொதுத் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி – மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செ.வெ.எண்:-73/2025
நாள்:-26.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியர்களுக்கும் வாழ்த்துக் கடிதம் (தபால் அட்டை) அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 02.03.2026 அன்று முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியர் எழுத உள்ளார்கள். இதன் பொருட்டு, கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியருடனும் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது 21,419 மாணவ, மாணவியருக்கும் தனித்தனியாக வாழ்த்துக் கடிதம் (தபால் அட்டை) அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள 21,419 மாணவ, மாணவியருக்கும் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருண்மைகள் பின்வருமாறு:-
அன்பார்ந்த புதுமைப்பெண்களே! தமிழ்ப்புதல்வர்களே!
பள்ளிப் படிக்கட்டுகள் வெற்றிச் சிகரத்தை நோக்கி உங்களை நகர்த்தும் தருணம் இது. இது பொதுத் தேர்வு மட்டுமல்ல… உங்கள் வாழ்வின் கலங்கரை விளக்கம்! நம்பிக்கையின் சின்னம்! உழைப்பின் அடையாளம்! இதை மனதில் நிறுத்துங்கள். நம்பிக்கையுடன் படியுங்கள்! உற்சாகத்துடன் செல்லுங்கள்! தேர்வை எழுதுங்கள்! மறவாமல் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களின் ஆசி பெற்றுச் செல்லுங்கள்…
கல்வி மட்டுமே எவராலும் அழிக்க முடியாத ஆயுதம்…
கற்கை நன்றே… கற்கை நன்றே…
முயற்சி திருவினையாக்கும்!
இப்படிக்கு,
தம்பி மற்றும் தங்கைகளின்
வெற்றிக்காக காத்திருக்கும்
உங்கள் கலெக்டர் அண்ணன்…
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.