மூடு

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகிவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2025

செ.வெ.எண்:-27/2025

நாள்:13.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகிவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகிவற்றிற்கான விண்ணப்பங்கள் 02.01.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

2025-2026 ஆம் கல்வியாண்டிற்க்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும்.

அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.02.2025. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் பெற www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம், Email ID: detischennai@gmail.com மற்றும் தொலைபேசி எண்: 044-22501006, 044-22501113 மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.