மூடு

கொடைக்கானல்

வழிகாட்டுதல்

கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். 7200 அடி கடல் மட்டத்திற்கு மேல் உயரம் கொண்டது. தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மற்றும் பழநி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. மலைகளின் இளவரசி என எல்லோராலும் அழைக்கப்படுகிறது.

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்களை மிகவும் கவருகிறது. ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும். குதிரைகளில் செல்வதும் மிகவும் மக்களைக் கவர்கிறது.

கொடைக்கானல் ஆய்வுக்கூடம்

1899ஆம் ஆண்டு சூரிய இயற்பியல் ஆய்வுக்கூடம் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. தென்னிந்தியாவின் பழனி மலைப்பகுதியில் இந்திய வான்இயற்பியல் பயிலகமாக இக் கொடைக்கானல் ஆய்வுக்கூடம் உள்ளது.

கதிர் கோட்டம்

20 செ.மீ. அளவுள்ள கதிர்கோட்டம் காணப்படுகிறது. வின்வெளியினை பார்வையிட இது பயன்படுகிறது. சில நேரங்களில் பொதுமக்களின் பார்வைக்கும் அனுமதிக்கப்படுகிறது.

ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம்

இந்த ஆய்வகத்தில் பிரசித்தி பெற்ற ஆஸ்ட்ரோனியம் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. சூரிய மாதிரி இங்கே அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சூன் 15ஆம் தேதி வரை பொது மக்களுக்காக காலை 10 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 முதல் 6 வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். மற்ற காலங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

புகைப்பட தொகுப்பு

  • கொடைக்கானல் ஏரி
  • கொடைக்கானல்
  • கொடைக்கானல் அருவி

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகிலுள்ளது.

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள் ரயில் நிலையம் திண்டுக்கல்

சாலை வழியாக

திண்டுக்கல் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.