சொளந்தரராஜ பெருமாள் திருக்கோயில், தாடிக்கொம்பு
வழிகாட்டுதல்சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் திண்டுக்கல்-கரூர் சாலையில் திண்டுக்கல்லிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. திரு. சௌந்தர்ராஜன் முக்கிய தெய்வமாக உள்ளார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தனியே கோயில் உள்ளது. இங்குள்ள சிவன்-பார்வதி, ரதி-மன்மதன் முதலான சிற்பங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுள்ள சிற்பங்களுக்கு இணையானவை. சித்திரை மாதம் (ஏப்ரல்-மே) முக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 12 தினங்கள் அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
மதுரை விமான நிலையம் அருகிலுள்ளது.
தொடர்வண்டி வழியாக
அருகில் உள்ள் ரயில் நிலையம் திண்டுக்கல்.
சாலை வழியாக
திண்டுக்கலில் இருந்து 18 கி.மீ தொலைவில் கரூர் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.