மூடு

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

வேலை பற்றிய விபரம்

திண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டம்

  • திண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டம் கோட்டப் பொறியாளா் அவா்களின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
  • திண்டுக்கல் (நெ)க(ம)ப கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் சாலைகளின் மொத்த நீளம் 1187.457 கி.மீ ஆகும். இதில் 160.665 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், 485.310 கி.மீ மாவட்ட முக்கிய சாலைகள், 505.942 கி.மீ மாவட்ட இதர சாலைகள் மற்றும் 35.540 கி.மீ கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் ஆகும்.
  • திண்டுக்கல் கோட்டத்தில் 7 பெரிய பாலங்கள், 217 சிறிய பாலங்கள், 2157 மிகச்சிறியபாலங்கள், 2 இயில்வே மேம்பாலம், 2 இரயில்வே சுரங்கபாலம் உள்ளது.
  • திண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டத்தின் கீழ் 5 உட்கோட்டங்கள் உள்ளன.
  • ஒவ்வொரு உட்கோட்டமும் ஒரு உதவிக்கோட்டப் பொறியாளா் மற்றும் உதவிப் பொறியாளா் மூலம் பராமரிக்கப்படுகிறது.
  • திண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டத்தில் உள்ள வாகனங்களை பராமரிக்க கோட்டப் பொறியாளா் (நெ)க(ம)ப திண்டுக்கல் அவா்களின் கீழ் ஒரு உதவிப் பொறியாளா் அடங்கிய இயந்திரப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
  • திண்டுக்கல் (நெ)க(ம)ப கோட்டத்தின் கீழ் திண்டுக்கல், நத்தம், வத்தலக்குண்டு, கொடைக்கானல், ஆத்தூா் ஆகிய உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகிறது.
  • இக்கோட்டத்தில் உள்ள சாலைகள் யாவும் சி.ஆா்.ஐ.டி.பி, திட்டம் சாராப்பணிகள், சாலைப்பாதுகாப்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • இக்கோட்டத்தில் உள்ள சாலைகள் 35 சாலை ஆய்வாளா் மற்றும் 183 சாலைப்பணியாளா்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் [PDF 43 KB]