மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பங்கே மகத்தானது. மாவட்ட ஆட்சியரே மாவட்ட நிர்வாகத்தில் முதன்மையானவர். இவர் மாவட்ட நீதிபதியாக இருந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறார். மாவட்டத்தின் திட்டம், வளர்ச்சி, தேர்தல், துப்பாக்கி உரிமங்கள் முதலியன இவரின் முக்கியப் பணியாகும்.
கூடுதல் ஆட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வருவாய் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றார். இவர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆவார். இவர் குடிமைப் பொருட்கள், நிலம் சார்ந்த நடவடிக்கைகள், சுரங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாகம் ஆகிய பொறுப்புக்களை கவனிக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் சிறப்பாக செயல்பட மாவட்ட வருவாய் அலுவலரும், துணை ஆட்சியர்களும் துணை செய்கிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து பிரிவுகளையும் கண்காணிக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்றாடம் நடைபெறும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் நிர்வகிக்கிறார்.
திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, இந்திய ஆட்சிப் பணி – மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ளவர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) துணை ஆட்சியர் நிலையில் உள்ளவர், உதவி இயக்குநர், பேரூராட்சி, மாநகர ஆணையர், நகராட்சி ஆணையர் ஆகியோர் ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான பணிகளை கவனிக்கின்றனர்.
பிரிவுகளும் பணிகளும்
- எ பிரிவு அலுவலக நிர்வாகம், தேர்தல்
- பி பிரிவு பட்டா மாறுதல் மேல் முறையீடு
- சி பிரிவு சட்டம் ஒழுங்கு
- டி பிரிவு அரசு நிலங்கள்
- இ பிரிவு நில எடுப்பு
- எப் பிரிவு நிதி ஒதுக்கீடு, தணிக்கை
- ஜி பிரிவு பதிவு வைப்பறை, தபால், சுத்த நகல்
- எச் பிரிவு ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலம்
- ஐ பிரிவு பிற்பட்டோர் (ம) சிறுபாண்மையினர் நலம்
- ஜே பிரிவு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை
- கே பிரிவு குடிமைப் பொருள் வழங்கல்
- எல் பிரிவு சமூக பாதுகாப்புத் திட்டம்
- ஆர் பிரிவு அகதிகள் நலம்
- சமூக நலத் துறை
- செய்தி மக்கள் தொடர்புத் துறை
- உள்ளாட்சித் தணிக்கை
- நில அளவை பராமரிப்பு
- வன நிர்ணயத் திட்டம்
- ஊரக வளர்ச்சி பிரிவு
- பேரூராட்சி நிர்வாகம்
- தாட்கோ பிரிவு
- கணிமம் மற்றும் சுரங்கத் துறை
- மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை
- தேசிய தகவலியல் மையம்
- இணை இயக்குநர், கூட்டுறவுத் துறை
- துணை இயக்குநர், கூட்டுறவுத் துறை
- துணை இயக்குநர், பொது விநியோகத் திட்டம்
- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம்
- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணக்குகள
- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிறுசேமிப்பு
- திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை
- ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்,
- குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
- திட்ட அலுவலர் மகளிர் திட்டம்
- உதவி இயக்குநர் தோட்டக்கலை
- இணை இயக்குநர் விவசாயம்