Close

Heavy Rain Alert – Control Room Inspection

Publish Date : 28/05/2024
.

செ.வெ.எண்:-22/2024

நாள்:-20.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(20.05.2024) பார்வையிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகள் பதிவு செய்யப்பட்ட பதிவேடுகள், அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(20.05.2024) கனமழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்தையடுத்து, மழை வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உட்பட அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விபரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டஆட்சியர் அலுவலகம் – 0451-1077, 0451-2400162, 2400163, 2400164, 2400167, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் -0451-2427304, திண்டுக்கல் கிழக்கு, வட்டாட்சியர் அலுவலகம் – 0451-2471305, நத்தம், வட்டாட்சியர் அலுவலகம் – 04544-244452, நிலக்கோட்டை, வட்டாட்சியர் அலுவலகம் – 9445000581, 04543-233631, ஆத்தூர், வட்டாட்சியர் அலுவலகம்- 9384094523, பழனி, வட்டாட்சியர் அலுவலகம் – 04545-242266, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் – 04553-241100, வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 04551-260224, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் – 04551-290040, கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகம் – 04542-240243, திண்டுக்கல் மாநகராட்சி – 9944570076, பழனி நகராட்சி அலுவலகம் – 7397634377, ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகம் – 9842370552, கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் – 04542-241253, 8489886639, 9786016606 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.