Close

Vidiyal Payanam Free Bus

Publish Date : 28/05/2024

பத்திரிகைச் செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் “விடியல் பயணத் திட்டம்“ வாயிலாக 13,17,76,901 பயணங்கள் மூலம் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டமான “விடியல் பயணத் திட்டம்“ பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

விடியல் பயணத் திட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் அரசு நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் 445 கோடி முறை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் மாதந்தோறும் ரூ.888 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக, 2021-ஆம் ஆண்டில்(ஜுன் மாதம் முதல்) மாற்றுத்திறனாளிகள் 1,47,702 முறையும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 11,154 முறையும், திருநங்கைகள் 9482 முறையும், மகளிர் 1,78,86,261 முறையும் என மொத்தம் 1,80,54,599 முறை கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் 4,35,451 முறையும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 27,886 முறையும், திருநங்கைகள் 21,500 முறையும், மகளிர் 4,36,15,780 முறையும் என மொத்தம் 4,41,00,617 முறை கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2023-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் 5,11,968 முறையும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 29,339 முறையும், திருநங்கைகள் 26,566 முறையும், மகளிர் 5,06,95,873 முறையும் என மொத்தம் 5,12,63,746 முறை கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, மாற்றுத்திறனாளிகள் 1,84,830 முறையும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 10,919 முறையும், திருநங்கைகள் 9,568 முறையும், மகளிர் 1,81,90,622 முறையும் என மொத்தம் 1,83,97,939 முறை கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாற்றுத்திறனாளிகள் 12,79,951 முறையும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 79,298 முறையும், திருநங்கைகள் 67,116 முறையும், மகளிர் 13,03,88,536 முறையும் என மொத்தம் 13,17,76,901 முறை கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் பேருந்து பயண செலவின் தொகையை சேமித்து வைக்க முடிகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.