Close

TNPSC group 4-Meeting

Publish Date : 13/06/2024

செ.வெ.எண்:-04/2024

நாள்:-07.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக தலைமை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(07.06.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளது. அதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வை கண்காணிக்க பறக்கும் படைகள், நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆத்துார் வட்டத்தில் 18 தேர்வு மையங்களில் 4,351 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 5 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 48 தேர்வு மையங்களில் 12,733 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 12 நடமாடும் குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 36 தேர்வு மையங்களில் 9,825 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 9 நடமாடும் குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜிலியம்பாறை வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 1,571 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 2 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் வட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,124 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 2 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளன., நத்தம் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 2,739 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 4 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கோட்டை வட்டத்தில் 34 தேர்வு மையங்களில் 8,896 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 8 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 3,976 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 5 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. பழனி வட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 9,958 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 10 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேடசந்துார் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,442 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 5 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படை என மாவட்டம் முழுவதும் மொத்தம் 228 தேர்வு மையங்களில் 59,615 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 62 நடமாடும் குழுக்கள், 16 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கோட்டைக்குமார் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.