Close

Makkaludan Mudhalvar Camp

Publish Date : 15/07/2024

செ.வெ.எண்:-25/2024

நாள்:-10.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் வருவாய்துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” (ஊரகம்) என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” (ஊரகம்) சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வருகிற 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை 68 முகாம்கள் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாம்களில் வருவாய்த்துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களுக்கு கீழ்கண்ட பட்டியலில்கண்டவாறு ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதனடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம்/பட்டா உட்பிரிவு சேவையை பெற ஆதார் அட்டை, கிரைய பத்திரம், வில்லங்க சான்றிதழ், வீட்டுமனை வரைப்படம் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களயும், பட்டா, சிட்டா நகல் சேவையை பெற ஆதார் அட்டை, விற்பனை பத்திரம்/சொத்துவரி ரசீது ஆகிய ஆவணங்களையும், நில அளவீடு (அத்து காண்பித்தல்) சேவையை பெற அரசு கணக்கில் பணம் செலுத்திய சலான் நகல், பட்டா நகல், கிரைய பத்திரம், வில்லங்க சான்றிதழ் மற்றும் இதர தொர்புடைய ஆவணங்களையும், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்று, ஊதியச் சான்று மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களையும், பிறப்பு / இறப்பு சான்றிதழ் பெற குழந்தை பிறந்த மருத்துவமனையில் பெற்ற ஆவணங்கள், இறந்தவரின் ஆதார் அட்டை, தாய் தந்தையரின் ஆதார் அட்டை/வாரிசுதாரரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆவணங்களையும், முதியோர் உதவித் தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வறுமைக் கோட்டு பட்டியல் எண், வங்கி கணக்கு புத்தகங்களையும், விதவை உதவித் தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வறுமைக் கோட்டுபட்டியல் எண், கணவரின் இறப்புச் சான்று, வங்கி கணக்கு புத்தகங்களையும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களையும், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்று, வங்கி கணக்கு புத்தகங்களையும், முதிர் கன்னி உதவித்தொகை பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.