Close

Jal Shakti Abhiyan – Meeting

Publish Date : 15/07/2024
.

செ.வெ.எண்:-29/2024

நாள்:-11.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மத்திய துணைச் செயலர் திரு.கா.கோபால கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது-

தேசிய நீர் இயக்கத்தின் ஜல் சக்தி அபியான் திட்டமானது 2019 முதல் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. 2024 ஆண்டிற்கு ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மழை நீர் சேகரிப்பின் (கேட்ச் தி ரெயின்) 5-வது விழிப்புணர்பு பிரச்சாரத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் முக்கிய பங்கு (“நாரி சக்தி சே ஜல் சக்தி”) என்பது குறித்து கருப்பொருளில் வலியுறுத்தப்படுகிறது. அதனடிப்படையில் தேசிய நீர் இயக்கத்தின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மை மற்றும் நீர் சேகரிப்பு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு திட்டத்தின் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும், நீரின் முக்கியத்துவத்தினை பெண்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நீர் மேலாண்மையில் பெண்களை முக்கிய பங்காற்றிட செய்திட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, நேரு யுவகேந்திரா திட்டம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை, மாநகராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் கொடைக்கானல் நகராட்சி ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.