Close

Special Gramasabhai Meeting

Publish Date : 18/07/2024

செ.வெ.எண்:-44/2024

நாள்:-15.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“கலைஞரின் கனவு இல்லம்” மற்றும் “கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” திட்டங்கள் தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.07.2024 அன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் “கலைஞரின் கனவு இல்லம்” 2024-2025 மற்றும் “கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” திட்டங்களின் கீழ் கணக்கெடுப்புகளில் விடுபட்ட தகுதியான பயனாளிகள் பட்டியலை கிராம சபையில் ஒப்புதல் பெற, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் 18.07.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கிராமசபைக் கூட்டத்தில், “கலைஞரின் கனவு இல்லம்” 2024-2025 கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகள் பட்டியல் தேர்வு ஒப்புதல், “கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” 2024-2025 கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகள் பட்டியல் தேர்வு ஒப்புதல் ஆகிய பொருள் குறித்து கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில், தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.