Close

Emp-Private JOB FAIR

Publish Date : 30/07/2024

செ.வெ.எண்:-68/2024

நாள்:-25.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 26.07.2024 அன்று சிறப்புத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக வரும் 26.07.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30-மணிக்கு சிறப்புத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவனம் பங்கேற்று ஜியோ பாய்ண்ட் மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர், பைபர் அசோஷியேட், பைபர் இன்ஜினியர், டிஜிட்டல் ரிப்பேர் ஸ்பெலிஸ்ட், ஏர் பைபர் பிரிலேன்சர் டெக்னிசியன், ஜியோ பாய்ண்ட் லீட் மற்றும் விற்பனை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்து முடித்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வேலைநாடுநர்கள் முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் கல்வித் தகுதி மற்றும் தேர்வு செய்யப்படும் பணி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். பகுதிநேர அடிப்படையிலும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எனவே, விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு 9499055924 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.