Close

School Uniform Distribution

Publish Date : 31/07/2024
.

செ.வெ.எண்:-80/2024

நாள்:-29.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

1642 பள்ளிகளில் பயிலும் 1,05,022 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகிறது – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சங்காரெட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.07.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ், பயன்பெறும் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ், பயன்பெறும் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று அளவெடுத்து முதல் இணை சீருடைகள் தைத்து முடிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1642 பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளில் சத்துணவு உண்ணும் 1,05,022 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணிகள் இன்று (29.07.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சங்காரெட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சாலைப்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழிழற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் பள்ளிகளுக்கு நேரில் சென்று சீருடைகள் வழங்கப்படவுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வளர்மதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி அமுதா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி நித்திரா, தலைமையாசிரியர் திருமதி சந்திரா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.