Close

Makkaludan Mudhalvar Collector inspection

Publish Date : 02/08/2024
.

செ.வெ.எண்:-01/2024

நாள்:-01.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

காந்திகிராமம் ஊராட்சியில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் ஊராட்சியில் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் இன்று(01.08.2024) நடைபெற்ற ”மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தொடங்கி வைத்தார்கள்.

”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில், அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர்(முன்னோடி வங்கி) மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற ஊராட்சி பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு, 11.07.2024 முதல் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இன்று(01.08.2024) திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், எ.வெள்ளோடு ஊராட்சியில் விஎம்கே கல்யாண மண்டபம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், காந்திகிராமம் ஊராட்சியில் தம்பிதோட்டம் மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வில்வாதம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி வேலு மஹால் ஆகிய இடங்களில் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தொடர்ந்து, 02.08.2024 அன்று சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், தவசிமடை ஊராட்சியில் தவசிமடை அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், பி.விராலிப்பட்டி ஊராட்சியில் எஸ்.எஸ். மஹால், பழனி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பட்டி ஊராட்சியில் தர்மசாலத்தினி மஹால் ஆகிய இடங்களிலும், 06.08.2024 அன்று நத்தம் ஊராட்சி ஒன்றியம், சேத்துார் ஊராட்சியில் அரசவங்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கள்ளிமந்தையம் ஊராட்சியில் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, வடமதுரை ஊராட்சி ஒன்றியம், கொம்பேரிபட்டி ஊராட்சியில் கொம்பேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும், 07.08.2024 அன்று ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சியில் ஆர்விஎல்என்ஏ அரசு மேல்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குள்ளலகுண்டு ஊராட்சியில் குள்ளலகுண்டு தொடக்கப்பள்ளி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஜவ்வாதுபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, 08.08.2024 அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தருமத்துப்பட்டி ஊராட்சியில், தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், தட்டாரப்பட்டி ஊராட்சியில், தட்டாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும், 09.08.2024 அன்று வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், விராலிமாயன்பட்டி ஊராட்சியில் விராலிமாயன்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

இம்முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.வடிவேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.