Close

PMJVK-MP- Meeting

Publish Date : 19/08/2024

செ.வெ.எண்:-44/2024

நாள்:-14.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் (PMJVK) திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் இன்று(14.08.2024) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி 01.03.2021 முதல் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லுாரியிலிருந்து 9 கி.மீட்டர் துாரத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் 3000 வெளி நோயாளிகள், 1000 உள்நோயாளிகள், பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் 42, சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் 110, பிரசவங்கள் 35, மருத்துவ பரிசோதனைகள் 700 மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு 1301 படுக்கைகள், ஆக்சிஜன் இணைப்புடன் 822 படுக்கைகள், வென்டிலேட்டர் இணைப்புடன் 110 படுக்கைகள், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை அரங்கம் 15, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அரங்கம் 4, மற்றும் 574 கழிப்பறைகள் உள்ளன.

இந்த மருத்துவக்கல்லுாரியில், மருத்துவர்கள் 196, மருத்துவப் பணியாளர்கள் 357, அலுவலக பணியாளர்கள் 127 மற்றும் துப்புரவு பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பணியார்கள் 682 நபர்கள் உள்ளனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நியூரோ அறுவை சிகிச்சை நிபுணர், நெப்தராலஜிஸ்ட், ஆன்கலோஜிஸ்ட் போன்ற பணியிடங்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதால் இம்மருத்துவமனைக்கு இதுதொடர்பாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் அந்த நோயாளிகள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேற்கண்ட மருத்துவ நிபுணர்களுக்கான பணியிடங்களை உருவாக்கி, அந்த பணியிடத்தை நிரப்பி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் (PMJVK) திட்டத்தின் கீழ், 2024-2025-ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (G 7 Super speciality) கட்டடம் ரூ.176.00 கோடி (மத்திய அரசு நிதி 105.60 கோடி மற்றும் மாநில அரசு பங்கு ரூ.70.40 கோடி) மற்றும் அடியனுாத்து கிராமம், யாகப்பன்பட்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் புதிய மாணவியர் விடுதி ரூ.27.00 கோடி(மத்திய அரசு நிதி ரூ.16.20 கோடி மற்றும் மாநில அரசு பங்கு ரூ.10.80 கோடி) என மொத்தம் ரூ.203.00 கோடி செலவில் ஏற்படுத்துவதற்கு மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மரு.சுகந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மா.மாரி, முதன்மைக் கல்வி அலுவலர்(பொ) திருமதி பரிமளா உட்பட மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.