Close

Independence Day Celebration-Dindigul

Publish Date : 19/08/2024
.

செ.வெ.எண்:-46/2022

நாள்:15.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 100 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 182 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 84 பயனாளிகளுக்கு ரூ.80.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(15.08.2024) காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பாக பணிரிந்த காவல்துறையினர் 100 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, நில அளவை மற்றும் பராமரிப்புத்துறை, கல்வித்துறை, மருத்துவக் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை, வனத்துறை, புள்ளியியல் துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை, உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை என மொத்தம் 182 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

.

இவ்விழாவில், வருவாய்த்துறை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டிலும், இலவச வீட்டுனைப் பட்டா 17 பயனாளிகளுக்கு ரூ.3.20 இலட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ரூ.2.88 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகளிர் மேம்பாடு தொழில் முனைவோர் கடன் 10 பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் கடனுதவி 3 பயனாளிகளுக்கு ரூ.17.45 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தொகையாக 10 பயனாளிகளுக்கு ரூ.31.82 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் மண்புழு உர தயாரிப்பு படுகை வழங்குதல்(அட்மா திட்டம்) 2 பயனாளிகளுக்கு ரூ.8000 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகையாக 15 பயனாளிகளுக்கு ரூ.13.80 இலட்சம் மதிப்பீட்டிலும், மருத்துவத்துறை சார்பில் சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் 10 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.80.68 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், காந்திகிராம் தம்பிதோட்டம் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் அச்சுதா பப்ளிக்பள்ளி, ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொசவப்பட்டி அக்சயா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என 5 பள்ளிகளைச் சார்ந்த 364 மாணவ, மாணவிகள் கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். நிறைவாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து, மலர் துாவி மாரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.