Close

Monday Grievance Day Petition

Publish Date : 22/08/2024
.

செ.வெ.எண்:-53/2024

நாள்:-19.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த வங்கிகளுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், பசுமை சாம்பியன் விருது ஆகியவற்றை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.08.2024) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 323 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைத்துறையில் சிறந்து விளக்குகின்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் குரலிசையில் முதலிடம் தா.சோனியா, இரண்டாமிடம் ச.அட்சயவர்ஷா, மூன்றாமிடம் அ.செல்சியாமேரி, பரதநாட்டியத்தில் முதலிடம் க.ஹர்ஷினி, இரண்டாமிடம் ச.விஜயமகாலட்சுமி, மூன்றாமிடம் சே.கேத்ரின்பெர்னா, கருவியிசையில் முதலிடம் சி.ஜோதிமணி, இரண்டாமிடம் க.ஆனந்தராஜ், மூன்றாமிடம் ரா.மனோஜ்ராம், ஓவியப் போட்டியில் முதலிடம் ம.முத்தரசு, இரண்டாமிடம் இரா.பிரியதர்ஷினி, மூன்றாமிடம் திரு.லோ.சர்வேஸ்வரன், கிராமிய நடனத்தில் முதலிடம் சு.கோபி, இரண்டாமிடம் ஆ.சிந்தியா, மூன்றாமிடம் வி.கலையரசன், என ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.6,000, இரண்டாவது பரிசாக ரூ.4,500, மூன்றாம் பரிசாக ரூ.3,500 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான “பசுமை சாம்பியன் விருது“-க்கு தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் திரு.ந.ஆனந்தகுமார், நத்தம் என்.புதுப்பட்டி திரு.ப.தேவந்திரன் ஆகியோருக்கு தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த வகையில், தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 2248 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.157.71 கோடி கடனுதவி மற்றும் கனரா வங்கி சார்பில் 506 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.44.25 கோடி கடனுதவி வழங்கி சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 2 வங்கிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 118 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.16.19 கோடி கடனுதவி வழங்கியதற்காக பாங்க் ஆப் இந்தியா திண்டுக்கல் கிளைக்கு ரூ.15,000 பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், 61 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.6.60 கோடி கடனுதவி வழங்கியதற்காக கனரா வங்கி காந்திகிராமம் கிளைக்கு ரூ.10,000 பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், 28 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.3.08 கோடி கடனுதவி வழங்கியதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் டி.கொசவப்பட்டி கிளைக்கு ரூ.5,000 பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ஒரு பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா,

.

.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் திரு.குணசேகரன், உதவி மேலாளர் திருமதி ஜான்சிராணி, தொழில்நுட்ப உதவியாளர் திரு.தங்கராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.