Close

TNLA-Edugal Committee-Pre Arrangement

Publish Date : 22/08/2024
.

செ.வெ.எண்:-54/2024

நாள்:-20.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு-2024-2025 வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.08.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு(2024-2025) வரும் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. குழு தலைவர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் திரு.ஜே.ஜே.எபினேசர் (எ) ஜே.ஜான் எபினேசன், திரு.சீ.கதிரவன், திரு.க.தேவராஜி, டாக்டர் வை.முத்துராஜா, திரு.அ.செ.வில்வநாதன், திரு.கி.அசோக்குமார், திரு.டி.கே.அமுல்கந்தசாமி, திருமதி கு.சித்ரா, திரு.கே.ஏ.பாண்டியன், திரு.துரை.சந்திரசேகர் ஆகியோருடன் செயலக அலுவலர்கள் வருகை தரவுள்ளனர்.

இக்குழுக் கூட்டம், 28.08.2024 அன்று காலை 11.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மீனவர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, 29.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் கொடைக்கானல் விருந்தினர் இல்லத்தில் இக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகத்தின் ஆண்டறிக்கைகள், எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு ஆய்வு பயணத்தின்போது, பணி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை நிறைவாக முடித்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் திண்டுக்கல் திரு.சக்திவேல், பழனி திரு.சௌ.சரவணன், கொடைக்கானல் திரு.பி.சிவராம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.